அஞ்சாதே கெஞ்சாதே
அன்பை அளவின்றி காட்டு ஆசைகளை குறை!
இனிமையாக பேசு ஈவிரக்கம் காட்டு!
உறுதியுடன் செயல் படு ஊக்கம் அளி மற்றவர்க்கு!
எதையும் துணிவுடன் சந்தி
ஏமாற்றப் பட்டாலும் ஏமாற்றாதே!
ஐயம் எதற்கும் உதவாது ஐயா என்று முதியவர்களை அழைத்திடு!
ஒவ்வொருவருக்கும் ஒரு விதமான வாழ்க்கை!
ஓலமிட்டு கதறினால் சீக்கிரமே விழும் வழுக்கை!