நீ என் நண்பன்டா
பிறந்தது முதல்
நான் ஒரு கடனாளி
தாய் பெற்றதனால்
என்னில் பலநூறு கடமைகள்
சிந்தனையில் அவளுக்காய்
பார்கோடு வரைபில் ...!
தகப்பனின் பராமரிப்பில்
இருந்ததால் நினைவலைகளில்
ஏராள நன்றிக்கடன்கள் மீதமாய்
அடுக்கடுக்காய் ...!
சகோதரர்கள் , சகோதரிகள்
என்னோடு கூடப்பிறந்த குற்றத்துக்காய்
கடைசிவரை கண்காணிப்பு , உதவி உபசாரம்
நிரந்தரமாய் ..!
என்னோடு கலந்து, காலம் முழுதும்
இருக்கும் மனைவி,
கண்கலங்காமல்
பாதுகாக்கும் அக்ரிமெண்ட்,
கடமைக் கடன்கள்
எண்ணிலடங்காமல் ...!
பாலர் பாடசாலை முதல்
என்னோடு சிரித்து, என்னை மகிழ்வித்து
என்னோடு கூத்தும் கும்மாளம் , குதூகலத்துடன்
பிரிந்தும் சேர்ந்தும் ,
கவலைகள் பல என் முகம் இருந்தாலும்
நம் நட்பு கண்டவுடன் மறந்து சிறு பிள்ளைகள் போல்
மாறிவிடும் நண்பன் உனக்கு மட்டும் ஒரு கடமைக் கடனும் இல்லையடா ?
நம் தோழமையில் மட்டும் துன்பம், துயரம் கண்ணீர் ஏதடா ?
ஏனென்றால் நீ என் நண்பன்டா !!!