குழலூதும் விநாயகர் - நேரிசை வெண்பாக்கள்
நேரிசை வெண்பாக்கள்
பசுவின் அருகிருந்து கண்ணனைப் போல
பசுமைநிற மேனியனாய் பக்தன் - வசியமாக
புல்லாங் குழலூது மெங்கள் விநாயகன்
எல்லாந் தருவான் இனிது! 1
குழலூதும் நல்விநாய கன்வளம் சேர்ப்பான்
பழவினைகள் போக்கிடுவான்; என்றும் - பழம்போன்ற
நற்கருணை யோடு நலமருள்வான்; நீயுமவன்
பொற்பதங்கள் பற்று விரைந்து! 2
விநாயகர் பட உதவி - தினமலர்