நெஞ்சில் மறையாத காதல் 555
***நெஞ்சில் மறையாத காதல் 555 ***
என்னழகே...
நீ பார்த்த பார்வையில்
சரிந்தேன் மலர்கள்மீது...
உன் குறுகுறு பார்வை சேர்ந்து
வாழசொல்லுது உன்னோடு...
காணும்
கனவுகளும் மறையலாம்...
காதல்
மறையாது நெஞ்சில்...
உன் இதழ் ஓரம்
சிந்தும் வெட்கம் அழகுதான்...
உன் விரலில் அவ்வப்போது
சிக்கிக்கொள்ளும் கூந்தல் அழகுதான்...
என்னை சிக்கவைத்த உன்
கள்ளப்பார்வையும் அழகுதான்...
உன் திருட்டு பார்வையில்
நான் உணர்ந்தேன்...
உன்னிடம் சிறைப்பட்டு
விட்டேன் என்று...
உன் பூவரச மொட்டு
உன் கன்னக்குழியில்...
முத்தம்
வைப்பது எப்போது...
பகல் வானத்தில் வெளிச்சம்
தராத வெண்மதி போலத்தான்...
உன் மனது காதலை
மறைத்துக்கொண்டு...
என் இதயநிலா
உன்னை தேடுகிறேன்...
நீ காதலை வெளிப்படுத்தும்
நாள் எதுவென்று.....
***முதல்பூ .பெ .மணி.....***