காதல் சதிபதி வினோதம்

ஆசிரியப்பா

பன்னிரண்டு வயது பாலகன் கன்னி
பதினேழு வயது டையாளை கெடுத்து
சூலாக்க கெட்டு நிற்கும் நாடு
தடுப்பா ரில்லாது எடுப்பார் பிள்ளை
இந்தத் தமிழ்வாழ் நாடு முதியோரை
பெரிசு என்று சொல்லி சிரித்த
நாய்களால் நாடு கெட்டு
திருந்தா குட்டிச் சுவராய்ப் போனதோ


போதைத் தலைக்கேறி பாதையில் படுத்த
பாலகர் தாண்டவது மிதித்தழ துழவும்
திருட்டுப் பூனையாய் விழுந்து எழுந்து
வெளிவிழும் தகப்பன் தாயதின் நடுவில்
பிள்ளை எப்படி வளரும் பிஞ்சில்
முத்தி பேச்சை மீறும்
யார்தான் என்செய் வார்சொல்லு நீயே

தனியே வந்து செய்யும் குடித்தனம்
புத்தி சொல்ல ஆளில்லை தெருவில்
அடக்க யாருமில்லை செல்லப் பிள்ளை
பள்ளிக் கூடத்தில் படிப்பு சொல்லும்
நல்ல ஆசிரியர் அடிக்க பெற்றோர்
பாய்வர் ஆசானை எதிர்த்து கத்தி
கொண்டு குத்தும் இந்நிலைக்
கெவராம் காரணம் அரசியல அரசே




......

எழுதியவர் : பழனி ராஜன் (25-Apr-22, 2:30 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 64

மேலே