சுண்டைக்காய் வற்றல் - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
(’த்’ ‘ற்’ வல்லின எதுகை)
பித்த அரோசகம்போம் பேராப் புழுச்சாகும்
உற்ற கிராணியறும் உட்பசியாஞ் - சத்தியமாய்ப்
பண்டைக் குதஆமம் பற்றறுமிங் (கி)யாரையுந்தான்
சுண்டைக்காய் வற்றலுண்ணச் சொல்
- பதார்த்த குண சிந்தாமணி
இவ்வற்றல் பித்தத்தால் ஏற்பட்ட சுவையின்மை, மலக்கிருமி, கிராணி, ஆசனத்துவாரச் சீதக்கட்டு இவற்றைப் போக்கி பசியை உண்டாக்கும்