தான்றிக்காய் - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

சிலந்திவிடங் காமியப்புண் சீழான மேகங்
கலந்திவரும் வாதபித்தங் காலோ(டு) - அலர்ந்துடலில்
ஊன்றிக்காய் வெப்பம் உதிரபித் துங்கரக்குந்
தான்றிக்காய் கையிலெடுத் தால்

- பதார்த்த குண சிந்தாமணி

நேரிசை வெண்பா

ஆணிப்பொன் மேனிக்(கு) அழகும் ஒளியுமிகுங்
கோணிக்கொள் வாதபித்தக் கொள்கைபோந் - தாணிக்காய்
கொண்டவர்க்கு மேகமறுங் கூறா அனல்தணியுங்
கண்டவர்க்கு வாதம்போங் காண்

- பதார்த்த குண சிந்தாமணி

இது சிலந்திவிடம், ஆண்குறிக்கிரந்தி, சீழ்ப்பிரமேகம், திரிதோடம், இரத்தபித்தம், வாதம், பித்தம், வாத தோடம், உட்சூடு இவற்றைப் போக்கி அழகையும் ஒளியையும் உண்டாக்கும் .

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (30-Apr-22, 11:04 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 26

மேலே