கும்ப விநாயகர் - நேரிசை வெண்பாக்கள்

நேரிசை வெண்பாக்கள்

கும்பம் தலையி லணிந்தே குதூகலமாய்
எம்மான் விநாயகன் எங்களை - தும்பிக்கை
கொண்டே அரவணைக்க என்னதவம் செய்தோமோ;
பண்டுபோல் காப்பான் அவன்! 1

கும்பம் தலையி லணிந்தே குதூகலமாய்
எம்மான் விநாயகர் எங்களுக்கு - நம்பிக்கை
ஊட்டுவார் நாள்தோறும்; உள்ளம் நெகிழ்ந்துநாம்
காட்டுவோம் நன்றி அவர்க்கு! 2

- விநாயகர் பட உதவி - தினமலர்

மெய்யன் நடராஜ் • 03-Feb-2015 10:12 am

நாளுக்கோர் நாயகன் நாமம் தனைபாடும்
காளகண்டம் நீவிர். களித்தாடப் பாளிதப்
பொங்கல் பரவசத்தைப் பந்தியிட்டே பார்க்கின்ற
உங்கள் கவிதை ருசி.

நாயகன் - வி)நாயகன்
காளகண்டம்= குயில்
பாளிதம் =சர்க்கரை

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (30-Apr-22, 12:58 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 21

மேலே