மானம் அழியா ஒழுக்கத்தின் மிக்கதூஉ மில்லை பழியாமல் வாழுந் திறம் – அறநெறிச்சாரம் 106

நேரிசை வெண்பா

தானத்தின் மிக்க தருமமும் தக்கார்க்கு
ஞானத்தின் மிக்க உசாத்துணையும் - மானம்
அழியா ஒழுக்கத்தின் மிக்கதூஉ மில்லை
பழியாமல் வாழுந் திறம் 106

– அறநெறிச்சாரம்

பொருளுரை:

வறியோரை நாடி அவர்க்கு வேண்டுவன உதவுதலைக் காட்டினுஞ் சிறந்த அறமும், பெரியோர்க்கு அறிவைக் காட்டிலும் சிறந்த ஆராயுந் துணைவனும் பெருமை கெடாத ஒழுக்கத்தைக் காட்டிலும் சிறந்த நல்லொழுக்கமும் இல்லை; இம்மூன்றும் பிறர் பழியாமல் வாழ்வதற்கேற்ற செயல்களாகும்.

குறிப்பு: உசாவுதல் - கேட்டறிதல்,

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (2-May-22, 3:43 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 27

மேலே