தாயின் சிறப்பு

தாய்மார்கள் அனைவருக்கும் அன்னையர்தின நல்வாழ்த்துக்கள்

வயிற்றினுள்
இருந்தபோது
வருடிக்
கொடுத்தவள்.....

மாதங்கள்
கூட கூட
இறைவனிடம்
மன்றாடி
நின்றவள்
நம்மை
பிரசிவிக்க.....

உருண்டும்
பிரண்டும்
படுத்து
நம்முயிர்
காத்தவள்.....

வளவி
அணிந்து
சப்தம்
மீட்டிய
இசைப்பிரியா....

நாம்
து யில் கொள்ள
தாலாட்டு
பாடி
தமிழ் பரப்பு ம்
பெண்பாற்புலவர்.....

அன்பு
என்னும்
பசி க்கு
அமுதமானவள்....

தமிழை
கற்றுக் கொடுத்த
முதல்
தமிழ் ஆசி ரி யை.....

சுயநலம்
கொள்ளா
பொதுநலவாதி....

விறகு
பொறுக்கி
அடுப்புமூட்டி
விருந்து படைத்த
விநோதமானவள்....

கண்களில்
பெருங்காயம்
பெற்றாலும்
உணவில்
வெங்காயம்
சேர்த்தவள்....

புத்தாடை
அணிவித்து
உற்று உற்றுப்
பார்த்து இரசிக்கும்
சுற்றுலா ப் பயணி....

தந்தையிடம்
முந்தானை அவிழ்ப்பதில்
காட்டிய தயக்கத்தினை
நம்மிடம் காட்டாமல்
மழையின்போது
தலைதுவட்டியவள்....

உயிரெழுத்தின்
முதலெழுத்தும்
அவள்தான்
நம் உடல் செ ல் லி ன்
உட் கரு வும்
அவள் தான்....

பாலெனும்
நறுமணம் கொண்ட
நறுமுகையவள்....

எழுதியவர் : அ. முத்துக்குமார் தமிழன் (16-May-22, 8:59 pm)
Tanglish : thaayin sirappu
பார்வை : 114

மேலே