இறைவன்
பாற்கடலை கடைத்தெடுக்க தேவர்க்கு
அமுதம் கிடைத்தது இன்னும் இறைவனுக்கே
இலக்குமி கிடைத்தாள் மற்றும் எல்லாம்
தரவல்ல காமதேனு மற்றும் நோய்க்கெல்லாம்
அருமருந்து தரும் கடவுள் தன்வந்த்ரி
மனிதனே அறியதிலும் அரிது மானிடப்பிறவி
இப்பிறவி எடுத்து வாழ்ந்திடும்நீ
அகந்தையை அடியோடு வெட்டி மடித்து
சிந்தையிலே எப்போதும் சிரீதரன் நாமம்
வைத்து பக்தியால் உன்னிதயத்தைக்
கடைந்தெடுக்க சத்தியமாய் திருமால்
உன்கண்முன் நின்று காட்சிதருவான்