அற்புதத் தாய்

யார் யாரோ எத்தனை எத்தனையோ
அதிசயங்களையும் அற்புதங்களையும்
நிகழ்த்தியிருக்கிறார்கள்

என் தாய் நிகழ்த்திய
ஒரே ஒரு அற்புதத்திற்கு ஈடாகுமா என வியக்கிறேன் நான் இப்போது

நீர் சொட்டும் ஈரவிறகில்
சோறு பொங்கி
என் வயிற்றை நிரப்பிய
தெய்வம் அவள்...
.

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (4-Jun-22, 9:46 pm)
பார்வை : 149

மேலே