ஜீவன் உள்ளவரை வாழும் காதல் 555

***ஜீவன் உள்ளவரை வாழும் காதல் 555 ***
உயிரே...
எனக்கு பட்டும்
தெரியவில்லை...
விட்டு சென்ற உன்னை மட்டும்தான்
நினைக்க தோன்றுது...
விடிந்தும் விடியல் போன
என் நீலவானம் நீயின்றி...
பூத்து குலுங்கும் பூக்களை கூட
பறிக்காமல் ரசிக்கிறாய் வாடிவிடுமென்று...
உயிராக உன்னை நேசித்த
என்னை வாடவைத்தது ஏனோ...
நிமிடத்தில்
தூக்கி எறிந்துவிட்டாய்...
நேசித்த உன்னை மறக்க
பல ஜென்மம் வேண்டுமடி...
இனியும் உன்னை
தொடர மாட்டேன்...
உன்னை புரிந்துகொண்டு
விலகுவதும் புரிதல் தானடி...
ஜீவன் உள்ளவரை நம்
காதல் வாழும் என்றாய்...
வாழும் என் ஜீவன்
உள்ளவரை நம் காதல்...
உணர்வில் கலந்த உயிர்
நினைவில் தவிக்கிறது...
உன் பிரிவால்.....
***முதல்பூ. பெ.மணி.....***