அன்பு மகனே

அன்பு மகனே நீ
ஆசை திறந்ததும் ஏனடா.
இவ்வுலகை விட்டு நீ
விரைந்து சென்றதும் ஏனடா

ஈன்றவள் என்னையும்
மறந்த காரணம் ஏதடா.
ஈரம் வற்றாத எனது
விழிகளைப் பாரடா.

உள்ளம் உப்பாய்க் கரைந்திடும்
கதை தனைக் கேளடா.
அதன் உள்ளே உன் எண்ணம்
வைரக்கற்கலாய் மின்னுவதும் உண்மையடா

எத்தனை எத்தனையோ
வழி தேடி விட்டேன் நானடா .
எந்த வழியிலும் உன்னை மறந்து
வாழ்ந்திட வழி தென்படவில்லையடா.

ஏதேதோ சொல்லிப் புலம்புகின்றேன்
காண்போரிடமெல்லாம் தானடா.
ஒவ்வொருத்தரும் சொல்லிடும்
ஆறுதல் வார்த்தைகளும்
ஆழியாய் உன் நினைவலைகளை
மீண்டும் என் நெஞ்சக்கரை நோக்கித் தள்ளுதடா.

ஐயோ அம்மா என்ன
செய்திடுவேன் சொல்லடா
பாவாளி ஆகிடுவேனோ நானும்
என மனம் ஐயம் கொள்ளுதடா.

ஓயாமல் கூக்குரல் எழுப்பி அழைக்கின்றேன் உன் பெயர் சொல்லியடா.
ஓடி வந்து தங்கமே நீ இன்னும்
பதில் கூறவில்லையடா.

இளவட்டக் குரல் எல்லாம்
உனது ஏக்கத்தை தூண்டிச் செல்லுதடா
இதனாலே ஔடதம் தீர்க்கா
நோயாளி ஆனேன் நானுமடா.

அன்பு மகனே இன்னும்
எத்தனை எத்தனை காலமடா
நான் கண்ணீரைக்
குத்தகை எடுத்திட வேண்டும்
😭😭😭😭😭😭😭😭😭😭

எழுதியவர் : ஆர் எஸ் கலா (4-Jul-22, 1:06 pm)
Tanglish : anbu makanae
பார்வை : 83

மேலே