பெண்

சித்தன்னவாசல் சிலையோ..
சிரிக்கும் செங்கமலமோ..
சிற்பிவடித்த சிலையோ..
அள்ளித் தண்டோ..
தாமரை மலரோ..
"கண்ணகியாக" இருப்பினும்
சரிதான்..

உன் செவ்விதழ்களில்
செஞ்சாந்து பூசியழகு
படுத்துவதில் தவறில்லை..

உன் மீன்விழிகளுக்கு
மையிட்டு விழிகளை
விஸ்தீரனப்படுத்து தவறில்லை..

உன் சிகையை
சீவிமுடிந்து அழகுபடுத்த
மறவாதே, தவறில்லை..

அழகு உடையெடுத்து
ஆலிங்கனம் செய்து
மகிழ் தவறில்லை..

ஆயினும்,

தன் அரன்விட்டு
விலகும் வேளையில்
காவல் அரண் அற்று
விலகும் மடமையை
மட்டும் மறவாமல்
செய்திடாதே..

மறக்குங்கால் உன்மேல்
கயவர்கள் கண்பட்டால்
கணப்பொழுதும் தாமதியாது
கசக்கி வீதியில் வீசுவர்
வீச்சம் பெற்றோர்.

கசங்கியபின் கண்ணீர்
உகுப்பின், கடுகளவு
பயனும் கிட்டா
அக்கண்ணீருக்கு..

ரௌத்திரம் பழகிய
பாரதி கண்டபுது மைப்
பெண்ணாகவே இருப்பினும்
கற்புக்கு பாதுகாவலாக,
துணிவுமட்டு மல்லாது
காவலரணும் அதிய வசியம்
இக்கலி யுகத்தினிலே...

எழுதியவர் : கவி பாரதீ (15-Jul-22, 6:17 pm)
சேர்த்தது : கவிபாரதீ
Tanglish : pen
பார்வை : 114

மேலே