மழை செய்த பிழை

மழை செய்த பிழை!
ஏழையின் மண் வீட்டை
இரக்கமில்லாமல் கரைதாய்.

மழை செய்த பிழை!
உழைப்பாளியை நனைய செய்து அவன்
வயிற்றை காயப்போட்டாய்.

மழை செய்த பிழை!
உழவனின் உயிரான பயிரை
வெள்ளத்தால் அழித்தாய்.

மழை செய்த பிழை!
பிழைக்க சென்ற மீனவனை
கடலில் மூழ்கடித்தாய்.

மழை செய்த பிழை!
கிழக்கும் மேற்கும் இணைக்கும்
சாலைகளை துண்டித்தாய்.

மழை செய்த பிழை!
நல்லோன் தீயோன் யாரென்று அறியாமல்
இருப்பிரிவினைரையும் கொன்றாய்.

எழுதியவர் : (18-Jul-22, 10:27 pm)
சேர்த்தது : பிரதீப்
பார்வை : 51

மேலே