ஆச்சல்
உன் பொண்ணுப் பேரு என்னடி துளசி?
கொள்ளுப் பாட்டி நான் துளசியா இருந்தவள், வடக்கே சென்றபின்பு 'துள்சி' ஆகிவிட்டேன்.
துளசி என்று எனையினி அழைக்காதீர்.
சரிடி துள்ளுசி உன் குழந்தை பெயர் என்னடி?
அருமையான இந்திப் பெயர் 'ஆச்சல்'
அலைச்சலை அறிவோம் ஆச்சியை அறிவோம்
ஆச்சலுக்கு என்ன பொருள் சொல்லடி துள்ளுசி.
பொருளற்ற இந்திப் பெயர்களையும்
பொருள் தரும் இந்திப் பெயர்களையும்
பெரும்பாலான தமிழர்கள் தங்கள்
பிள்ளைகளுக்குச் சூட்டி மகிழும் காலம்
வடக்கே வாழும் நாங்கள் எங்கள் மகளுக்குத்
தமிழ்ப் பெயரைச் சூட்ட பைத்தியமா பிடித்துள்ளது?
நீ உரைப்பது உண்மைதானடி துள்ளுசி
நம்மூரில் தமிழ்ப் பெயரோடு யாருமே இல்லை
பிறமொழிச் பெயர்களே பெருமை தரும் பெயர்கள் ஆனது
தன்மானமும் தாய்மொழிப் மற்றும் இல்லா
சமுதாயம் தமிழ் சமுதாயம் மட்டுமே.
பிறமொழி பேசுவோர் செம்மொழியாம் நம் மொழியை
இழிவாக நினைப்பாரே, யாருக்கும் வெட்கமில்லை.
ஊரோடு ஒத்து போவதுவே வாழ்க்கைக்கு ஏற்றது.
அதைத்தான் நாங்கள் செய்தோம் பாட்டி
கூண்டு வாழ்க்கை வாழும் உமக்கு
குறைகள் மட்டுமே தெரியும்
இனியும் விளக்கம் உமக்குக் தேவையில்லை.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
Aachal = One who is steady. Indian origin feminine name.
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
