சாகாவரம்

சாகாவரம் வேண்டும்
பூமிதனில் நிலைத்து
வாழும்வரம் வேண்டும்...

மனிதர் மனம்தனை
அன்பால் நான்
ஆள வேண்டும்...

என்நினை வெழும்
பொழு தெல்லாம்
மனிதர்தம் மனம்
கனிந்திட வேண்டும்...

தம்கருவரை உறவுக்கு
முன் னுதாரனமாக
எனை முன்மொழிய
வேண்டும்...

உடல்விட்டு எனது
உயிர்பிரிந்து காலம்
கடந்த பின்னும்
மனிதர்தம் மனங்களில்
நான் நிலைத்திட
வேண்டும்...

ஆம் மனிதர்தம்
மனம்தனில் சாகாவரம்
வேண்டும்...

எழுதியவர் : கவி பாரதீ (30-Jul-22, 10:39 pm)
Tanglish : saakaavaram
பார்வை : 99

மேலே