ஆதாரம் கேட்காதே

டேய் மணி, இங்க வாடா.

வணக்கம் தலைவரே.

நான் உனக்கு என்ன சொல்லியிருக்கிறேன். யாரு வந்தாலும் நம்ம கட்சித் உறுப்பினராக்குனு சொன்னேனா இல்லையா?

சொன்னீங்க தலைவரே.

நேத்து யாரோ ஒருத்தன் வந்தாராம் அவனை நீ சேத்துக்க முடியாதுனு சொன்னது உண்மையா?

அவன் ரவுடிங்க ஐயா. அதனால் தான் ஆதாரம் கேட்டேன். இல்லைனு சொன்னான். போகச் சொல்லிட்டேன்.

ஏன்டா மணி உனக்கு அறிவு இருக்குதா?
நல்லவன் யாரும் தன்னை ரவுடினு சொல்லமாட்டான்டா. நம்ம கட்சி ரவுடி ஒருத்தன் தேர்தல் நேரத்தில ஜீப்பில ஏறிட்டு தெருத் தெருவா நம்ம கட்சி கோடியோட போனாப் போதும்டா. மக்கள் பயதத்திலே நம்ம சின்னத்துக்கே வாக்களிப்பாங்கடா. அதுக்குத்தான்டா ரவுடிகளுக்கு முன்னுரிமை கொடுத்து நம்ம கட்சித் சேத்துக்கிறோம்.

சரிங்க தலைவரே. இனிமேல் இதுபோல தவறு நடக்கப் பாத்துகிறனுங்க.

எழுதியவர் : மலர் (6-Aug-22, 10:19 am)
சேர்த்தது : மலர்91
Tanglish : aathaaram ketkathae
பார்வை : 132

மேலே