இதயத்திற்கு பேசும் திறன் இல்லை 555

***இதயத்திற்கு பேசும் திறன் இல்லை 555 ***
ப்ரியமானவளே...
பகலெல்லாம் தேடி
அலைகிறேன் உன்னை காண...
பகலில் உன்னை
காணாத வலிகள்தான்...
இரவில் என் விழியோரம்
கசிகிறது சில நினைவுகள்...
என்னை நீ பிரிய
உன் மனம் சம்மதித்தபோது...
என் விழிகள்
கண்ணீரால் நனைகிறது...
இதயத்திற்கு
பேசும் திறன் இல்லை...
பேச தெரிந்தால்
சொல்லி இருக்கும்...
சில நினைவுகள்
இறக்கும்வரை மறக்காது என்று...
உன்னை நான்
நினைத்து வாழ்வது சுலபம்...
உன்னை
மறந்து வாழ்வது கடினம்...
சூழ்நிலையால் ஊமையாகி
போனதோ உன் காதல்...
உன் சுழநலத்திற்காக
ஊமையாகியதோ என் காதல்...
கைதொடும்
தூரத்திலும் நீ இல்லை...
என் பார்வை செல்லும்
தூரத்திலும் நீ இல்லை...
நான் மட்டுமே தவிக்கிறேன்
உன் நினைவுகளால்...
என் நித்திரையில் உலாவரும்
உன் நினைவுகள் இருக்கும்வரை...
நானும் இருப்பேன்
இந்த பூ உலகில்.....
***முதல்பூ.பெ.மணி.....***