ஒரு நாள் கனவில்

வழக்கமாக அந்த இரவு , உறக்கத்தை அழைத்தது.,
முதல் நாள் நினைவுகள் முழுமையாய் அழிந்தன ......,
காட்சிகள் பல வந்து கண் முன்னே நின்றது ,பலவற்றுள் ஒன்றாக
சில நிகழ்வு வந்தது ,
மறக்காத அந்நாளை, மறுபடி ரசித்தேன் ....,
இன்பமும் துன்பமும் விளையாடி சென்றது. அதில், ஒரு பகுதி காதல் ...!
பள்ளி பருவமது பழகாத பல முகங்கள், ஒரு முகத்தை பார்த்ததுமே பல முககங்கள்
மறந்துவிட,
பல நாட்கள் பழகியதாய் எனக்குள்ளே ஓர் உணர்வு , சட்டென மறைந்துவிட மனதில்,சலசலப்பு அந்நேரம் ....,
தன்னுடைமை தொலைந்ததை போல், தடுமாற்றம் உடல் முழுதும் ...தவிக்கிறது அங்கமெங்கும் மறைந்த முழு மதியை தேடி .......,
அன்றைய நாள் கடந்தது, இரவு முழுதும் உறக்கம் இல்லை, இமை மூடினாலும் இருட்டுக்குள் அவள் நினைவுகள் ..,
விடியலை வரவேற்றேன், வெட்கம் வந்தது .
தன் அழகை மெருகேற்றி தனித்துவமாய் நான் நிற்க...பெண் அழகு வரும் பாதை கண் இமைக்காமல் பார்த்திருந்தேன்..,
நேரம் கடந்தது வகுப்பறை மணி ஒலித்தது...,வர வில்லை அவள் மட்டும் .
சென்றுவிட்டேன் சினத்தோடு., சிரிப்பில்லா முகத்தோடு..,
நேற்று போல் மறுமுறை அப்பெண்ணழகை கண்டேனே .,மறையாமல் சில நேரம், என் மண தீயை அணைத்து விட்டால் ....சாதித்ததை நான் உணர்வதற்குள் , சட்டென மறைத்துவிட்டால் ...,தகவல் சேகரித்தேன்..,
வயதில் இளையவள், கீழ் வகுப்பு படிக்கிறாள்...!
எப்படி தொடர்பு கொள்வேன் என, எனக்குள்ளே சந்தேகம் ...எனது நண்பனின் தங்கையும் அவ்வகுப்பு படிக்கிறாள்.,
அறிந்ததும் எனக்குள்ளே அலை வந்து வீசுதே ..,அழகான அவளை சந்திக்க, ஒரு தூது கிடைத்ததே....!
நண்பனின் தங்கையிடம் நடந்ததை நான் கூற, நான் உதவுகிறேன்அண்ணா............! என்று, நளினமாய் அவள் கூற.....நப்பிக்கை பிறந்தது வெற்றிக்கு முதல், சுழி என்று....!
நண்பனின் தங்கை.....?
தொடர்பு கொண்டால் அவளை ,என்னை பற்றி பேச மறுத்துவிட்டாள், அந்த அழகு என்னும் மழலை..,
நாட்கள் கடந்தது பதில் ஒன்றும் இல்லையே..,காதலை பற்றி பேச களம் இறங்கினேன் நானே,
சந்தித்தேன் அவளை மனம் திறந்து சொன்னேன் காதலை, பதில்,கிடைத்ததோ வாய் செருப்படி ....! அவமானப்படுத்தி விட்டால்..,!
மனமுடைந்து போனேன் மாதங்கள் கடந்தன ......, மீண்டும் ஒரு சந்திப்பு மிதிவண்டி பயணத்தில் ..
நடந்துகொண்டிருந்தால் பள்ளிக்கு , நான் அவளை கண்டுகொள்ளவில்லை .................இருந்தும் ,கடந்த சென்ற
நாட்களில் அவள் என் மனதை கண்டுவிட்டால் ...,
தூதுசென்ற தோழியிடமே அவள் தூதுவிட்டால் உன்னை நன் துளைத்துவிட்டேன் என்று...!
தொலைத்தது நீ மட்டும் அல்ல நானும்தான் என்று பதில் வார்த்தை
நான் கூற , பச்சை

கோடி
பறக்க தொடங்கியது என் காதலுக்கு...............................!
......
.......
........
..........
.............. விடிந்துவிட்டது!!!!!!!!!!!!!!!!!!!!!! அந்த ஒரு நாள் கனவு கலைந்துவிட்டது..........!#####

எழுதியவர் : மணிவண்ணன் .தா (17-Aug-22, 3:43 pm)
சேர்த்தது : தமணிவண்ணன்
Tanglish : oru naal kanavil
பார்வை : 196

மேலே