தாயன்பு
நேரிசை ஆசிரியப்பா
ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே,
சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கட்னே,
வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே,
நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே,
ஒளிறுவாள் அருஞ்சமர் முருக்கிக்,
களிறுஎறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே
(புறநானூறு)
ஈன்று புறந்தருதல் தாய்த்தலைக் கடனே,
சூலுடை மகவை பெற்றல் தாய்க்கடனாம்
மகளும் தாயையின்று கொலைசெய் வள்பாரு
மகனும் தாயுடை உழைப்பைத் தின்பன்
சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே,
உண்மை சான்றோன் ஆக்கவும் பறந்தவன்
வெளிநாடு பணியில் பெற்றவர் மறப்பன்
வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே,
வேலும் வேண்டாமே பெரியார்
அண்ணா திராவிடம் தமிழழிய போதுமே
நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே
வேந்தன் இல்லை மந்திரி பலருண்டு
நன்னடை அறியோம் இலவசம் அறிவோம்
ஒளிறுவாள் அருஞ்சமம் முருக்கவும் எதிரிகள்
களிறுஎறிந்து பெயரும் காளை
நானில்லை அப்பணி வடக்கின் பாவிக்கே
......