பச்சிலை - கிச்சலிக்கிழங்கு - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
பச்சிலைக்குக் கந்தம் பரிமளிக்கும் அவ்விலையோ
வெச்சைக் கிரந்திதனை மெய்ப்புழுவைச் - சொச்சமற
ஓட்டும்நற் கிச்சலியின் ஒண்கிழங்குக் குக்கபமும்
பூட்டுவிஷ மும்புண்ணும் போம்
- பதார்த்த குண சிந்தாமணி
பச்சிலைக்கிழங்கு பித்த கபவிரணம், இரத்தகபம், மலக்கிருமி இவற்றைப் போக்கும்; கிச்சலிக் கிழங்கிற்கு சிலேட்டும் நோய், கீல்பிடிப்பு இரணம் இவை நீங்கும்