புட்பராகம் - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

வீரிய விர்த்தியது மேன்மேலும் உண்டாகுங்
கூரியநற் புத்தியுண்டாங் கூறுங்கால் - பாரில்
பிணிவருக்கம் ஏகும் பெரும்புட்ப ராக
மணியாற் புகழுமுண்டாம் வாழ்த்து

- பதார்த்த குண சிந்தாமணி

இதனால் சுக்கில விருத்தி, நல்ல அறிவு, இவையுண்டாகும்; மேகம் முதலான நோய்களும் அகலும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (15-Oct-22, 7:52 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 21

மேலே