கோடாசலக் குளிகை – மகாவன்னி ரசம் - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

கோடா சலத்தால் கொடும்பாண்டு சோபைமுதல்
ஓடாக் கிராணியும்போம் உண்மையே - நீடுமகா
வன்னிரசம் என்னுரைக்கில் வாடாச் சலோதரமும்
பின்னிடையும் தப்பாது பேசு

- பதார்த்த குண சிந்தாமணி

கோடாசலக் குளிகையால் பாண்டு நோயும், வீக்கம் , நீங்கா கிரகணி இவை நீங்கும் . மகா வன்னி ரசத்திற்குச் சலோதரம் நீங்கும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (24-Oct-22, 8:01 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 17

மேலே