எதிலும் இயங்கும் இயக்கம் அவனே

புதியதாய் வெள்ளை அடிக்கப்பட்ட வீடு
அங்கு ஓர் சுவற்றில் ஒரு மிக மிகச்
சிறிய கட்டெறும்பு சுறு சுறுப்பாய்
செல்வதைக் கண்டு வியப்பில் ஆழ்ந்தேன்
உயிருள்ள ஜீவன் அது உயிருள்ள
ஜீவன் ஒவ்வொன்றிலும் 'உள்ளறைபவனாய்'
இறைவன் இருக்கின்றான் என்றோதுக்குகிறது மறை
இத்தனை ஏன் ஜடப்பொருளிலும் உறைகின்றான் 'அவன்'
அந்த எறும்பு எனக்கு புரிய வைத்தது
எதிலும் இயங்கும் இயக்கம் 'அவனே' என்பதை
'நான்' 'என்' என்ற இறுமாப்பில் இன்னும்
நாம் இயங்கி கொண்டிருப்பது மூடத்தனம்
வேறு என்ன மூடத்தனமே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (31-Oct-22, 4:54 pm)
பார்வை : 42

மேலே