குறி

ஒரு மாபெரும் இலக்கிய சொற்பொழிவு அப்படியென்று
விளம்பரம்....சரியான கூட்டம்

சிறப்பு பேச்சாளர் பேசிக்கொண்டே
இருந்தார். வழ வழ வென்று.
சுவாரசியம் இல்லை. ரொம்ப
போர்..கூட்டம் கிட்டத்தட்ட கலைந்துவிட்டது.
வெகுசிலரே இருந்தனர்.
பேச்சாளர் பேச்சை நிறுத்துவதாகத்
தெரியவில்லை...
இதோ முடித்து விடுகிறேன் என்று
சொல்லியே அரை மணி ஓட்டி விட்டார்.
பேசிக்கிட்டு வந்தவர் ஒரு மூலையில்
நின்றுகொண்டு ஒருவர் தன்னையே
கையில் ஏதோ வைத்துக்கொண்டு
குறிபார்ப்பதை உணர்ந்தவர்
அதிர்ந்தார். கையில் துப்பாக்கி..
வியர்த்து லேசாக நடுங்கியபடி
இந்தா முடிச்சுடுறேன் என்றவரை...

நீ முடிக்கமாட்டே..நான் முடிச்சுடுறேன்
உன்னை இல்ல..
உன்னையும் ஒரு பேச்சாளர்னு
புக் பண்ணி அழைச்சுக்கிட்டடு வந்தான்பாரு அவனை.அவன் எப்படியும்
உனக்கு மாலைபோட வருவான்ல
அவனைத்தான் குறி வச்சுக்கிட்டு
இருக்கேகேன் அப்படினு கத்தினார்..

நீ பேசு.. நீ பேசு...

எழுதியவர் : ரவிராஜன் (17-Nov-22, 6:03 pm)
சேர்த்தது : ரவிராஜன்
Tanglish : kuri
பார்வை : 61

சிறந்த நகைச்சுவைகள்

மேலே