குறையாத என் வலிகள் -சகி

வாழ்க்கை

கோடி கோடியாக
பணமிருக்கலாம்....

கிலோ கணக்கில்
தங்க நகைகள்
இருக்கலாம்....

இவை இருந்து
மனதில் உண்மையான
அன்பிற்கு என்றுமே
ஏக்கம் குறையவில்லை...

பத்து நிமிடம்
பேசினாலும் மனதில்
உள்ள பாரங்கள்
பனியாக கரைய வேண்டும்....

அப்படி எந்த
உறவும் உண்மையாக
கிடைக்கவில்லை...

அதிகம் இல்லையென்றால்
கூட குறைவாக என்னழகை
வர்ணிக்க வேண்டும்....

ஏதும் மறைக்காத
என் உண்மையான
அன்பிற்கு மட்டும்
அடிமையாக ஓர்
உன்னதமான உறவு
வேண்டும்....

பொய்யான அன்போ
என்னை உதாசீனப்படுத்தும்
பேச்சோ, செயலோ
இன்னும் என்னை காயப்படுத்திக்கொண்டே இருக்கிறது....

நான் ஏங்குவது
எல்லாமே உண்மையான
காதலும், துரோகம் இல்லாத
வாழ்க்கை மட்டுமே....

இவை எல்லாம்
எனக்கு ஏமாற்றமும்
ஏக்கமும் தான்...

என் மரணம் வரை....

எழுதியவர் : சகி (17-Nov-22, 10:00 pm)
சேர்த்தது : சங்கீதா
பார்வை : 56

மேலே