தேடல்
மண்ணின் தேடல் பயிராகிறது.
அனுபவ தேடல் அறிவாகிறது.
அன்பின் தேடல் காதல் ஆகிறது.
வாலிபத்தின் தேடல் காமம் ஆகிறது.
காமபுதையல் தேடல் பிறப்பாகிறது.
ஆணவ தேடல் அழிவாகிறது.
இறைவா!
இதயத்தின் தேடல் நீயாய் இரு.
இறுதியின் தேடல் மரணம் அல்ல
நிம்மதி…….
தேடலும் நீயே.
தேறுதலும் நீயே.