உடம்பு

குமர குருபரர்

கடவுள் வாழ்த்து


நீரில் குமிழி இளமை நிறைசெல்வம்
நீரில் சுருட்டும் நெடுந்திரைகள் -- நீரில்
எழுத்தாகும் யாக்கை நமரங்காள் என்னே
வழுத்தாது எம்பிரான் மன்று


வேறு ஒருவருக்கு சென்று சேரும் செல்வமும் , இளமையும் , நீரின்மேல் ஏற்படும் நிலையில்லா நீர் குமிழிக்கு ஒப்பாம் என்றும்
கடல்நெடு அலையது சுனாமியாய் எதையும் சுருட்டி கடலுள்
உடனிழுத் துச்செல்லும், காணாப்போம். அதுப்பல தரப்பட்ட யாக்கை என்னுமுடம்பு என்பதாம்.


குமர குருபர சுவாமிகள், இந்தப்பாடலை, கடவுளின் வாழ்த்தாக தனது நீதி நெறி விளக்கத்தில் பாடி சிதம்பர அம்பலத்தில் என்றும் நிலைபெற்றஅழியாத,ஆடிய பாதத்தை மடமையாக தோழாநிற்பது ஏன் என்றும் தொழுது வேண்டுங்கள் என்றும் கேட்கிறார்.....இதை பல்லாயிரம் வருடங்களுக்கு முன் சித்தர்கள் அனைவரும் தங்கள் சுவடியில் குறிப்பிட்டு இருக்கிறார்கள். இதைபோல தமிழ் புலவர்கள அனைவரும் சொல்லி யிருக்கிறார்கள்...இதை படிக்கா மூடர் நமக்கு வசனநடையில் எழுதிக் கவிதை என்று படம் காட்டுகிறார்கள்.

எழுதியவர் : பழனி ராஜன் (6-Dec-22, 8:47 am)
சேர்த்தது : Palani Rajan
Tanglish : udambu
பார்வை : 14

மேலே