ரத்தம்தானே

கண்ணீரில் மூழ்கித் தவிக்கும்
சக மனிதனுக்குத் தேவை
துடைத்து விடும் கரங்கள்...
ஆறுதலாய் சில வார்த்தைகள்.
கருத்துக்கள் கூறி...
அறிவுரைகள் வழங்கி...
அலையவிடும் அவலங்கள்
தேவையா?
சோறு என்றவுடன் அவனது
வயறு நிரம்பி பசியாறி விடுமா என்ன?
விடுதலை என்றவுடன் அவனது
அடிமைச் சங்கிலி அறுந்து விடுமா என்ன?
காரியம் செய்வோம் - வீண்
வீரியம் வேண்டாம் - வெறும்
வார்த்தைகள் வேண்டாம்.
செயலில் இறங்குவோம்.
மனித நேயம் போற்றுவோம்.
யாராய் இருந்தால் என்ன?
மனிதன் மனிதன்தானே! - நம்
ரத்தத்தின் ரத்தம்தானே!

எழுதியவர் : ஜீவன் (மகேந்திரன்) (10-Dec-22, 10:35 pm)
சேர்த்தது : ஜீவன்
பார்வை : 45

மேலே