கடல் அலை போல்

கடல் அலை போல்....

கடல் அலைகள்
கரையில்
வந்து வந்து மோதும்.

அலைகள் போல்....
காதல் எண்ணம்
என் மனதில்
வந்து வந்து மோதும்.

சில நாட்கள்
சில நேரம்.
கடல் அலைகள்
உயர்ந்து காணும்.

அலைகள் போல்...
காதல் எண்ணம்
என் மனதில்
உயர்ந்து காணும்

அலைகள் எல்லாம்
நுரையுடன் கரையில் மோதி
கரைந்து போகும்

அலைகள் போல்....
என் காதல் எண்ணம்
அவளுடன்
கரைந்து போகும்.

ஆக்கம்
சண்டியூர் பாலன்.

எழுதியவர் : சண்டியூர் பாலன் (10-Dec-22, 8:42 pm)
சேர்த்தது : இ க ஜெயபாலன்
Tanglish : kadal alai pol
பார்வை : 94

மேலே