💕உன் பார்வை💕

💕மைவிழியே...
என் இதயத்தை
மையம் கொண்ட செய்த
மான்விழியே...
உன் வழியில்
வந்தேன் என்று
காந்தமாய் ஈர்த்த
மயில்விழியே...

💕மயங்கினேன் உன் பார்வையில்
தயங்கினேன் என் வார்த்தையில்
விழுங்கினேன் காதல் எழுத்துக்களை
எப்படி சொல்வேன் என் காதலை
எப்படி வெல்வேன் உன் பார்வையை...

💕அப்படி பார்க்காதே
பார்க்காமலும் இருக்காதே
நெஞ்சம் தாங்காதே
கண்கள் தூங்காதே
என்னை கொள்ளாதே
அருகில் நெருங்காதே
பாவம் எந்தன் இதயம்
காயம் உந்தன் உபாயம்...!!!

எழுதியவர் : இதயவன் (24-Dec-22, 2:23 pm)
சேர்த்தது : இதயவன்
பார்வை : 336

மேலே