எழுத்துத்தளத்தால் மரபுக்கவிதை அழிகிறது
..
எழுத்துத் தளம் இன்று சாக்கடை யாகிப்போனதைப் பாருங்கள்
தமிழ் தமிழ் என்று பீத்திக் கொள்ளும் சிலர் தமிழின் பழம்பெருமை கருத்தில் கஊன்றிக் கற்க முடியாமல் அவர் எழுதும் எதுவும் அருமையான செய்யுள் என்றும் கவிதை என்றும் பாட்டு என்றும் தத்துவம் என்றும் சொல்கிறார்கள். அதெல்லாம் கழுதை நிற்கும் குட்டிச் சுவரே என்று தெரிந்து கொள்ளுங்கள். வரிக்கு ஒரேயொரு சீர் நான்குவரி எழுதகவிதையாம். இப்படி எந்த தமிழ் நூலில் கற்பித்தார்கள். அது மடமை.
அப்படி எழுதுவதை கையாலாகாதவன் முகப்பில் கிறுக்கி தினமும் அவர்கள் நான்கு பத்தி அல்லது தொங்கட்டான் போல வரிக்கு ஒருசீர் அல்லது இரண்டு சீர் மூன்று சீர் எழுதி பலரும் அதை கவிதை என்று குறிப்பிட்டு பல உரைநடைகளை காதல் காதல் என்று எழுதுகிறார். காதல் என்றால் நாக்கைத் தொங்கவிட்டு கொண்டு எவரும் பார்ப்பர் என்று நினைத்து எழுதி எழுத்துத் தளத்தை குப்பை மேடுகளாக்கி விட்டார்கள். நான் உண்மையை யதார்த்தமாகச் சொல்கிறேன்..இந்த எழுத்து தளத்தை நடத்துப வர்களும் முதலில் இருந்தே கவனிக்காது விட்டு விட்டார்கள்.இன்று சலிப்புத்தட்டி ஒன்றையும் கவனிக்காது கைகழுவி விட்டு விட்டார்கள்.
கவிதைகள் நான்கு வகைகள்
1...வெண்பா
2....ஆசிரியப்பா
3....கலிப்பா
4...வஞ்சிப்பா
மேலே சொன்ன நான்கு வகைக் கவிதைகளின் இனங்களே பாவினங்கள் அவைகளும் வருமாறு :-
பாவினம் என்பது
வெண்பா = நேரிசை வெண்பா இன்னிசை வெண்பா , பஃறொடை
விருத்தம் = கலிவிருத்தம் ஆசிரிய விருத்தம் வெளிவிருத்தம்
கலிப்பா கலிவிருத்தம் கலித்துறை கொச்சகம்
வெண்தாழிசை ஆசிரியத்தாழிசை கலித்தாழிசை
ஆசிரியப்பா = நிலைமண்டில ஆசிரியப்பா அடிமறி மண்டிலம்
வஞ்சி == வஞ்சி விருத்தம் வஞ்சித் துறை வஞ்சி அகவற் போன்றவை
இப்படி பாவினம் இலக்கணமுடன் இருக்கிறது.
பதுக்கவிதை என்று கவிதையின் யாப்பை கற்றுக்கொள்ள முடியாதவன் அவனாக புதுக்கவிதை என்று பெயர் சூட்டிக் கொண்டான். எதையும் எப்படியும் குறுக்கி நீட்டி எழுதி ஒவ்வொரு வரியையும் இரண்டுதடவை வாசிக்க அது புதுக் கவிதை என்று அவனே பெயர் சூட்டி மகிழ்கிறான்.
தமிழில் கண்டவரெல்லாம் கண்டதை எழுதி ஒருவருக்கொருவர் கவிஞரென்று கூறிக்கொண்டு அபத்தமான உரைநடைகளை உடைத்து தொங்கவிட்டு அதைக் கவிதை என்றும் புதுக்கவிதை என்றும் கூறிக்கொண்டு காதல் காதல் என்று கிறுக்கி பைத்தியங் களாகித் திரிகின்றனர். சில பொடிசுகளும் கவி என்ற பெயரைத்
தானே சூட்டிக்கொண்டு ஆபாசமாக எழுதி வருகிறார்கள். கவிதை என்பது என்ன என்பதை உணர்ந்து இந்த எழுத்துத் தளம் வரையறை வைக்காமல் விட்டுவிட்டார்கள்.
தாங்கள் எழுதுவ தெல்லாம், கிறுக்குவதை எல்லாம் கவிதை என்று நினைத்து கவிதைப் பகுதியில் எழுதவிட்டுவிட்ட இந்த எழுத்துத் தளம் ஒருவகையில் மரபுக் கவிதை களை அழித்துவரும் கருவியாக எனக்குத் தோன்றுகிறது. கிறுக்குபவர்க்கு என்று அல்லது கவிதை பழகு என்ற தனிப் பகுதி ஒதுக்கிட நல்லது. உறுப்பினர் என்று நுழைந்த பலரும் தங்களின் மனு விவரங்களை ஒன்று கூட எழுதமல் நுழைய அனுமதித்தது எதற்கு ? ஒருவன் தன்னை kd jd 400 500 என்றெல்லாம் மட்டும் எழுதி , பலரும் பொய்ப்பெயரை இயற்பெயர் என்று சொல்லி நுழைந்து அட்டகாசம் செய்வதை காணமுடிகிறது.
பல வேற்று மதத்தினர் எழுத்தில் நுழைந்து இந்துக்களின் சாமி படங்களை போட்டும் இலக்கிய நூல்களின் பெயர்கள் கிண்டலடித்தும் வருகிறார்கள். இவர்களை எழுத்துத் தளம் கவிதைப் பகுதியில் பிரசுரிக்க அனுதித்தது தவறு..இதன் காரணமாக தமிழ் படிப்பறிவில்லாத சிலர் விடிந்தது முதல்இரவுவரை காதல் காதல் என்று பத்து வெளியீட்டை போட்டு அதிகமாக கவிதை எழுதினான் என்று குறிப்பிடுவது வெட்கக் கேடு...