ஒருதலை காதல்
ஒருதலை காதல்
என்றுமே பேரழகு
நித்தம் நித்தம்
நினைத்து நினைத்து
வர்ணித்து
எழுதும் எழுத்துகளும்
அழகே!
முப்பொழுதும் கற்பனை அழகே!
சொல்லாத காதல் அழகே!
ஊடல் இல்லை!
மோதல் இல்லை!
பெரிய தேடல் இல்லை!
ஏமாற்றம் இல்லை!
எதிர்வாதம் இல்லை!
முகச்சுழிப்பு இல்லை!
முத்தம் இல்லை!
வெறுப்பு இல்லை!
அணைப்பு இல்லை!
அழைப்பு இல்லை!
குறுஞ்செய்தி காத்திருப்பு இல்லை!
உபத்திரம் இல்லை!
உரையாடல் இல்லை!
மயக்கம் இல்லை!
கலக்கம் இல்லை!
சந்திப்பு இல்லை!
நிபந்தனை இல்லை!
ஆனால்
இவையெல்லாம்
சேர்ந்து கிடைக்கும்
அனுபவம் தனி அழகே அழகு!
ஆசை வளர்ந்ததை விட
பல மாற்றம் நிகழ்ந்தது அழகு!
கொஞ்சம் எழுத்து திறன் மேம்படும்!
கொஞ்சம் அதிகமான இரசனை ஏற்படும்!
கொஞ்சம் தெளிவு கிட்டும்!
கொஞ்சம் பொறுமைசாலியாக திகழ்வாய்!
கோபத்தையும் கொஞ்சம் கொஞ்கலாக வெளிபடுத்துவாய்!
இத்தனை மாற்றமும்
வாழ்க்கையை
புதிய திருப்புமுனையாக மாற்றும்!!
.....இவள் இரமி..... ✍️❣️