நேரமில்லையோ

காலொன்று
ஒடிந்தது போல்
கோலூன்றி நடித்த நடிப்பு
சினிமாவில்
காலூன்ற உதவியது

செல்வக் களிப்பில்
சிறகடித்துப் பறக்கும்
சினிமா நாயகனின்
படங்கள் மாதக்கணக்கில் ஓடி
மகிழ்வைத் தந்தாலும்

நடிகரின் மணவாழ்க்கை
சரிபாதி கூட
தாண்டாமல் தடுமாறுதே ,
பணத்தை பார்த்த நடிகனுக்கு
மனத்தை அறிய நேரமில்லையோ !

எழுதியவர் : கோ. கணபதி. (4-Feb-23, 5:32 pm)
சேர்த்தது : கோ.கணபதி
பார்வை : 43

மேலே