சீற்றம்

அன்று அரசாளும் மன்னர் சினம்கொண்டார்
ஒருவர் மீது ஒருவர் அதனால்
பெரும் போர் மூண்டது அதனால்
இரு நாட்டிற்கும் பெரும் சேதம்
மக்கள் உயிர் இழப்பு பொருட்கள்
நாசம் பெருந்துயரில் நாடும் மக்களும்
இன்றும் இது நீடிக்கின்றது பாரும்
ரஷ்யாவும் உக்ரைனும் மீளா போரில்
இது இப்படி இருக்க மனிதருக்கு
மட்டும் வருவதல்ல வேண்டா கோபம்
இயற்கையும் அல்லவா அவ்வப்போது இதை
வெளிப் படுத்துகிறது திடீரென கோபத்தால்
உசும்புகிறது பூமித்தாய் மனிதர் பாவச்சுமை
தாங்க முடியாமல் அந்தோ இதன்
விளைவு பூமி வெடிக்கிறது பிளவுடன்
'நில அதிர்வு' என்று அழைப்பர் இதை
இதனால் ஆயிரம் ஆயிரம் மக்கள்
உயிர் இழப்பு சொல்லொணா பொருட்சேதம்
நேற்றைய துருக்கி நிலஅதிர்வு சான்று

அதனால் சீற்றம் என்றுமே சீரழிவுக்கே
கொண்டு செல்லும் அது எவ்வழி வந்தாலும்
என்பதை அறிந்திடு மனமே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (7-Feb-23, 3:52 pm)
Tanglish : seetram
பார்வை : 60

மேலே