சித்திர பாவையாய்

சித்திரத்திற் குள்ளிருந்து சிரிக்கின்றாய் பாவையே
எத்திறமோ அந்த சித்திர சிரிப்பிற்கு
அதுஏனோ எந்தன் உயிருக்குள் கலந்து
என் ஸ்வாசமாய் வெளியில் வந்து
என்முன்னே என் சிந்தையில் நான்
வடித்த பாவையாய் எழில் நடனமாடி
என்னை வந்து கட்டி அணைத்து
ஆருயிரே என்றும் கூறி முத்தம்
ஒன்றும் தரு கின்றாயே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (17-May-23, 6:37 pm)
பார்வை : 62

மேலே