கூவம்
காரு போகும் பாலம்கீழே
கூவ நதியோடும்
கூவநதி ஓரம் குயில்
கூவி விளையாடும்
கூவுகிற போது மேகம்
தூவி மழையாடும்
தூவுகிற துளியில் மெல்ல
ஈர இலையாடும்
ஆடுகிற அழகில் இந்தப்
பாவி மனம் மாறும்
பாவம் இதப் பார்த்திடாம
ஏசி காரு போகும்