அவள் விழிகள்
அவள் விழிகள்
×××××××××××××
சிற்பி வடித்த சிலையின் மேனியில்
மயங்கியப் பிரம்மனும் உயிர் கொடுத்து
உருகி ஓடும் வெண்ணையில் மேனியும்
வானவில்லில் இல்லாத வண்ணத்தோடு படைத்தே
அன்னம் பிரித்தெடுத்த பால் நிலவோ
ஆயிரம் நட்சத்திரத்தில் தனித்து ஒளிரும்
மாது அவள் விழிகள் மது கிண்ணமோ
மயக்கியே வீழ்த்துகிறது இதயத்தின் குழியினிலே
முந்தியுடன் எனை மெல்லிடையில் பிணைத்தவளே
சொல் இடையில் அன்பால் சிறையிடுபவளே
கடையெழு வள்ளலாக முக்கனி சுவை
மேனி பரிமாற மணநாள் சொல்லிவிடு...
"யாதும் ஊரே யாவரும் கேளிர்"
சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ்