எழுதுகிறேன் ஒரு கவிதை
எழுதுகிறேன் ஒரு கவிதை
××××××××××××××××××××××××
கண்ணில் உருவம் கரையவில்லை காதலியே
நெஞ்சம் மறக்கவில்லை நஞ்சானக் கொடியவளே
கனவில் வருகிறாய் கவலையில் ஆழ்த்துகிறாய்
நிமிடம் ஓடலாம் நினையாத நொடியில்லையே
காதலே காதலே ஏன் வந்தாய்
காதலியே காதலியே ஏன் பிரிந்தாய்
சாதலே சாதலே என் விதியா ?
காளியே காளியே ஏன் கேளாய்
இவளுக்கு உறவு இவனென்று எழுதிடவே
அவளை காதலித்தமை ஆண்டவன் சோதனை
பாவம் செய்தவனை பரம்பரையில் அறியேன்
தவமிருந்தேத் துறவியாகிறேன் தர்மம் தழைக்கவே...
எழுதுகிறேன் ஒரு எழில் கவிதை
வாழ்வினை துவங்கும் வைதேகியை வாழ்த்தியே
தாழட்டும் துன்பம் தளிரட்டும் இன்பமுடன்
வாழ்க மணமகள் வையகம் போற்றவே..
கண்ணீரை மையாக்கிக் கருணையை தாளக்கியே
வண்ணக் கனவுகளை வரிகளாகப் பாதொடுத்து
எண்ணங்களை உனக்காக எழதியே வாழ்த்துகிறேன்
மணமக்கள் பல்லாண்டு மன்னிய(பொருந்தி) வாழ்கவே..
"யாதும் ஊரே யாவரும் கேளிர்"
சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ்