80 களில் மேலக்கலங்கல் அம்மன் கோவில் திருவிழா 8 ஆம் நாள் விழாமற்றும் வில்லிசை
80' களில் மேலக்கலங்கல் அம்மன் கோவில் திருவிழா..
8 ஆம் நாள் விழா..மற்றும் வில்லிசை
🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹
மண்ணால் வந்த மனிதனின் ஆசை., மண்ணுக்குள்ளேயேதான் புதைக்கவும் படுகிறது
-ஸ்ரீ கிருஷ்ணர்
8 ஆம் நாள் திருவிழா வந்தாலே ஊர் கலை கட்ட ஆரம்பித்துவிடும்..புத்தாடைகள் அன்றுதான் எங்கள் பெற்றோர்கள் எடுப்பார்கள் ..தாமிரபரணியாற்று வெள்ளமாக எங்கள் மனமெங்கும் பொங்கி பெருக்கெடுக்கும்
ஊர் முழுவதும் குழாய் விளக்குகள் பொறுத்தப்பட்டு வானத்தின் நட்சத்திரக் கூட்டம் மின்னுவதாக மின்னிட பகல் போல் ஊரே சொழிக்கும்..
கச்சசேரியெனும் பொதுவிடத்தில் மின்விளக்குகளான கிருஷ்ண பகவான் சாரதியாக குதிரை வண்டியை இயக்க அருச்சுனன் மிடுக்காக பயணிக்கும் காட்சி தத்ரூபமாக அமைக்கப்பட்டு கண்போர்களின் கண் முன் குருசேத்திரப் போர் வந்து செல்லும்....
மண் வேண்டாம் என என்னால் போரிடாமல் விலக முடியாதா..? ஆதங்கத்தோடு கேட்டான் அர்ஜுனன்.
சிரித்தான் கண்ணன். நீ நிற்பதே மண்மீதுதான். உன் இருப்பே மண்மீதுதான் என்றபின்., விலகி எங்கு செல்ல முடியும் அர்ஜுனா..? விண் நோக்கிச் செல்ல, உனக்கான காலம் இன்னும் வரவில்லை என்றபின்., மண்ணில்தான் போராடவேண்டும். மண்ணோடுதான் போராடவேண்டும்... மண்ணிற்குள் மறைந்து மண்ணாகும்வரை... என்றான் கண்ணன்.
அர்ஜுனனுக்குப் புரிந்தது. மண்ணில் கலக்கத்தான் இத்தனை போராட்டங்களும்... மண்ணாக மாறத்தான் இந்த ஓர் பிறவியும். நாம் கொண்ட சுகங்களும்., துக்கங்களும் மண்ணால்தான் அருளப்பட்டது. அதை அடையத்தான் இந்த வாழ்க்கைப் போராட்டமும். எதை வெல்ல நினைத்தோமோ., அதில்தான் அடங்கப் போகிறோம். இங்கு நாம் கண்ட உறவுகள் அத்தனையும்., இந்த மண் தந்ததுதான். உறவுகளையும்., உணர்வுகளையும் கொடுத்த மண்தான்., அவைகளை திரும்பவும் பெற்றுக் கொள்ளப் போகிறது. எனில்., நான் என்பது யார்..? நான் என்பதும் அதுதான்.
இதைப் புரிந்து கொள்ளவே வாழ்க்கை. புரிந்தாலும்., புரியாவிட்டாலும்., தான் யார் என்பதை மண் புரியவைத்துவிடும்.
தர்மன்., பீமன்., அர்ஜுன்., நகுலன்., சகாதேவன்., துரியோதனன்., கர்ணன்., துரோணர் என எல்லாம் ஒன்றுதான். அத்தனை பேரும்., விரைவாய் மண்ணோடு கலக்க., போராடும் களமே வாழ்க்கை. எவர் முந்துகிறார் என்பது மட்டுமே வாழ்க்கையின் சுவாரஸ்யம்.வா கண்ணா... நாளைய போருக்கு தயார் செய்ய வேண்டிய வேலைகள் நிறைய உண்டு... என அர்ஜுனன் கூற., கண்ணனுக்குப் புரிந்தது... தன்னை எவரென உணர்ந்துவிட்டான் அர்ஜுனன் என்பது.இங்கு ஒவ்வொருவர் வாழ்வும் குருஷேத்திரமே... ஒவ்வொருவரும் அர்ஜுனரே. விளங்கச் சொல்ல., கண்ணன் எனும் சாரதி ஒவ்வொருவர் உள்ளும் உண்டு.
வாழும்போதே அதை உணர்ந்தது., பீஷ்மரைத் தவிர வேறு எவரும் இல்லை
இந்தக் காட்சி கண் முன் நிற்க நான் என்ற அகந்தையும்..மண்ணாசையும் மனதை விட்டு நீங்கி விடும்....
தொடரும்...
சமத்துவ புறா. ஞான. அ.பாக்யராஜ்