தெளிதமிழேத் தெளிவாய்
நிலைமண்டில ஆசிரியப்பா
தெளிதமிழ் நிலையில் தெளிவை கண்டிலம்
அளித்திடும் கவிதை அனைத்தில் ஐயகோ
பளிச்சிட மறைத்தார் பக்தியினை ஐயகோ
தெளியா தமிழதை தெளிதமி ழென்பதும்
களிப்போ செந்தில் கடவுள் மறைத்ததும்
விளிப்பாய் சிவனை விடுத்த காரணமே
பாரதில் முருகன் பழம்பெரு தமிழ்தெய்வம்
வேரதை நீக்கிட விளையுமோ தமிழும்
சூரனெனின் வேலால் சூழ்ந்துனை முடிப்போமே
புல்லுமே விளையா பூண்டிலா பாலையே
ஒல்லுதல் தெரியா துன்பேரோ தெளிதமிழ்
நல்லிறை யொதுக்க நலிவை எய்துவாய்
வடக்கரின் அரசையும் வடக்கு இந்தி
அடக்கு முறையென அழுதல் வேலையோ
முடக்கு திராவிடம் முருகை போற்றுமே
ஒரு விகற்பக் குறள் வெண்பா
திராவிடந் தொங்க திருந்தா அழிவை
பிரானைத் தொழுது பிழை
.....