பார்வையில் வித்யாசங்கள்
பார்வையில் காமம் தோய்ந்த பார்வை உண்டு
அன்பும் பண்பும் தோய்ந்த ஆர்ய பார்வையும்
என்று அறிந்திடுவீரே பெண்களே மோகவலையில்
வீழ்ந்திடாது கண்ணும் கண்ணும் கலந்து
காதல் வளர்க்கும் உண்மைப் பார்வை
அறிந்தே காதல் கொள்வீரே
( இது வெறும் கூற்றல்ல, பார்வைக்கும் சொல்லும்
அங்க லட்சணம் சார்ந்த கவிதை; இங்கு ஆர்ய என்பதன்
அர்த்தம் ஆரியன் அல்ல.....பண்பில் சிறந்தவன் என்று
அர்த்தம்......ரஜப் பார்வை என்பது போல்)