சுதந்திர தாகம்

கையோயும் வரை தட்டி
வாய்நோகும் வரைக் கேட்டு
கால் நோகும்வரை தேடி அலைந்து
குருதிச் சிந்தி உயிர்களைப் பல இழந்து
அடக்குமுறைகள் பல கண்டு
போராடிப் பெற்ற சுதந்திரம்
இன்று சிறையில் அடைப்பட்டுள்ளது
பெண்கள் இழிவுப் படுத்தப்படுகிறார்கள்
சாதிக் கொடுமை தலைவிரித்தாடுகிறது
மத நல்லிணக்கம் மடிந்துப்போனது
சமத்துவம் புதைக்கப்பட்டது
ஜனநாயகம் எரிக்கப்படுகிறது
சுதந்திரநாட்டில் அடிமைகளாக
சிறுபான்மையினர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்
என்று வரும் இந்தச் சுதந்திரத்திற்கு ஒரு சுதந்திரம்...
.

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (15-Aug-23, 5:58 am)
Tanglish : suthanthira thaagam
பார்வை : 384

மேலே