கண்ணன் எங்கும்

நீலவா நிலெங்கும் நீயே கண்ணா
நிலவுலகில் மாக்கடலாய் நீயே கண்ணா
ஆதவனாய் அம்புலியாய் நீயே கண்ணா
எண்ணிலா அண்டங்களாய் தாரகை கோள்களாய்
நீயே என்றபடி எங்கும் பரவினீ
உன்னைக் காணவில்லை என்பார் பின்னே
கண்ணனிருந்தும் காணா அந்தகரோ ?

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (16-Aug-23, 12:57 am)
Tanglish : Kannan enkum
பார்வை : 40

மேலே