மலையகம் சரிந்தது
"இலங்கையின் ஊவா மாகாணத்தில் 2014 ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலச்சரிவில் உருக்குலைந்த மலையக மக்களைப் பற்றி வாசித்த போது தோன்றிய கருத்து".
மலையகம் சரிந்தது
மலையும் மடுவும் ஒன்றானது.
மாசற்ற மாபெரும்
மக்கள் கூட்டம்
மண்ணுக்குள் புதைந்தது....
வலு பெற்ற ஆண்
வாகாக ஓடிப் பிழைத்தான்,
வாடிய முதுமையும்,
வலு குழைந்த பெண்ணும்,
வாழவேண்டிய இளங்குருத்தும்
வதங்கி சரிந்தது மண்ணில்....
உயிர் பிழைக்க வழியின்றி
உற்ற உறவுகளை பிரிந்துநம்
உடலின் பாதியான தமிழர்கள்,
உருக் குலைந்து வெளியேறினர்
உயிரான மண்ணை விட்டு....
இலங்கை தேசம் அடைந்து
இரவு பகலாக உழைத்து
இல்லறத்தில் நல்லறம் கண்டு
இனிதே வாழ்கையில், எவ்வாறு
இன்முகத்துடன் சரித்தாய் நீநீநீநீ?
உருக் குலைந்த மலையகமும்
உன்தன் உறுப்புதானே பூமித்தாயே?
உரிமையோடு விளையாடி னாயோ
உருட்டிபுரட்டி உன்மனச் சோர்வுநீக்க,
உதிரம் குளிர்ந்ததா இப்பொழுது...???
கவிபாரதீ ✍️
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
