கவிதையால் வரைகிறேன் காதல் மடல்
கவிதையால் வரைகிறேன்
।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।
காதல் மடல்
।।।।।।।।।।।।।।।।।।
வரைகிறேன் காதல் மடல் காதல்மொழியில் /
வந்து விட்டாய் இதயத்துக்குள் நீ /
சுட்டு விழி கண்டு-கார்மேக /
சொட்டும் மை கொண்டு வரைகிறேன் /
தோகை விரித்தாடும் வண்ண மயில் /
தோகை சிறகினை எழுத்தாணி கொண்டு /
உன் கூரிய பார்வையில் கூர்முனையாக்கி /
உன் செவ்விதழ் பூக்கள் தொடுத்து/
கவிதைபடைத்து உன் நினைவால்-பருவத்தை /
காதலுக்கு காவு கொடுத்து காத்திருக்கேன்/
காதல் மடல்கண்டு வரவில்லையெனில் -சங்க /
காலத்து மடல்ஏறி உயிர் துறப்பேன் /