மழை

பலவர்ணம் பூசிய வான மகள்
வெட்கி கருமேக ஆடை புனைந்தாள்
வீசிய தென்றல் தெம்மாங்கு பாட
வெட்டிய மின்னலில் கர்ப்பம் தரித்தாள்
விண்ணதிரும் இடியொன்று பனிக்குடம் உடைக்க
விளையும் பூமிக்கு மழையெனும் மகளை
வாரிசாக தாரை வார்த்தாள்

எழுதியவர் : சி ராமகிருஷ்ணன் (24-Nov-23, 2:24 pm)
சேர்த்தது : ராமகிருஷ்ணன்
Tanglish : mazhai
பார்வை : 87

மேலே