ஏறி செல்லடா……

ஏறி செல்லடா……!
05 / 12 / 2023
நல்லநேரம் சேர்ந்து வந்தா
நல்லது நடக்கலாம் - அட
கெட்டநேரம் கூட வந்தா
உள்ளதும் போகலாம்.
நல்லநேரம் கெட்டநேரம்
வெளியில் இல்லையடா - அது
உனக்குள்ளே ஒளிஞ்சிருக்கு
நீயும் நம்புடா

நெல்ல வெதைச்சா நெல்லு மொளைக்கும்
இயற்கையில் நடக்கும் - அட
சொல்ல வெதைச்சா சொல்லு மொளச்சி
சோகத்தை கொடுக்கும்
நெல்லும் சொல்லும் நம்ம
வாழ்வின் ஆணிவேரடா - அத
மதிச்சு நீயும் போற்றிவையடா

முயற்சி இன்றி ஆகாதது
எதுவும் இல்லையடா - அட
உழைப்பையும்தான் சேத்துக்கிட்டா
தோல்வி இல்லையடா


முயற்சியும் உழைப்பும் நம்ம
இரண்டு கண்களடா - அட
கண்கள் இல்லையனா நமக்கு
பார்வை ஏதடா?

பாதையிலே இருக்கும் பல
ஏற்ற தாழ்வடா - அது
வாழ்க்கையிலே வந்துவிட்டா
தொடரும் கேடடா
பாதையிலே கால நீயும்
பாத்துவையடா - பாழும்
ஏற்ற தாழ்வு இல்லாமதான்
ஏறி செல்லடா.

எழுதியவர் : ஜீவன் (மகேந்திரன்) (5-Dec-23, 7:15 pm)
சேர்த்தது : ஜீவன்
பார்வை : 22

மேலே